நாடு முழுவதும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்திய ஸ்டேட் வங்கியில் உள்ள அதிகாரிகளின் 1226 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் 29 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பிராந்தியங்களை அடிப்படையாகக் கொண்ட அதிகாரிகளை (circle-based officer -CBOs) தேர்ந்தெடுக்க இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சென்னை, பெங்களூரு, போபால், ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களுக்கான 1,226 காலிப் பணியிடங்களும் ஏற்கெனவே காலியாக இருந்த 126 காலிப் பணியிடங்களும் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் 250 காலிப் பணியிடங்களும் ஏற்கெனவே காலியாக இருந்த 26 காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இதற்கென நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுக்கு டிசம்பர் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் ஆவணங்களைத் திருத்தவும் கட்டணத்தைச் செலுத்தவும், விண்ணப்பித்து முடிக்கவும் டிசம்பர் 29 கடைசித் தேதி ஆகும்.
தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் ஏற்கெனவே வங்கியில் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வர்களின் வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி / எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு.
தேர்வு முறை
தேர்வு முறை 3 கட்டங்களாக நடைபெறும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்க்ரீனிங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய 3 தேர்வுகளிலும் தேர்வர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.
தேர்வுக் கட்டணம்
எஸ்சி / எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் கிடையாது. பிற பிரிவினரும் பொதுப் பிரிவினரும் ரூ.750 கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இவற்றில் தேர்வாகி, காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.36 ஆயிரம் முதல் ஊதியம் வழங்கப்படும் என்று இந்திய ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://ibpsonline.ibps.in/sbircbonov21/
கூடுதல் விவரங்களுக்கு: https://sbi.co.in/documents/77530/11154687/081221-CBO-21+Final+Detailed+Advt+ENG.pdf/6d3a8188-f5a6-e9dd-98fc-e580796a0766?t=1638963781497
*
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.