பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஜூனியர் அசோசியேட்- Junior Associate (Customer Support & Sales)  அதிகாரிகளுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணி விவரம்


ஜூனியர் அசோசியேட் ( Junior Associate )


நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் க்ளர்ரிக்கல் க்ரேட் நிலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அந்தந்த உள்ளூர் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


மொத்த பணியிடங்கள் - 8,282


குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, லடாக், தமிழ்நாடு,புதுச்சேரி, தெலங்கானா, மேற்கு வங்காளம்,சிக்கிம்,. அசாக்ம், மிசோரம். திரிபுரா. பீகார், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கி கிளைகளில் இந்த வேலைவாய்ப்பின் மூலம் தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


தமிழ்நாடு வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் - 171


கல்வி மற்றும் தகுதிகள்


இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


தெரிவு செய்யும் முறை:


இதற்கு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


முதல் நிலை தேர்வு



முதன்மை தேர்வு





 



விண்ணப்ப கட்டணம்





ஊதிய விவரம்


ரூ.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920 )


இதற்கு தொடக்க ஊதியமாக ரூ. 19,900/- (ரூ.17900/- plus two advance increments admissible to graduates)


மும்மை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் தொடக்க ஊதியமாக ரூ.37,000/- வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?


பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள முகவரியான https://sbi.co.in/ அல்லது
https://www.sbi.co.in/web/careers/current-openings - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


இது தொடர்பான சந்தேகங்களுக்கு ..தொடர்புக்கு - 022-22820427 ( 11:00 AM and 05:00 PM வங்கி வேலைநாட்களில்) மின்னஞ்சல் முகவரி - http://cgrs.ibps.in



இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://sbi.co.in/documents/77530/36548767/161123-JA+2023-Detailed+Advt.pdf/926d28be-7df8-36f3-7113-344404668498?t=1700129762521 - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.12.2023