SBI CBO: எஸ்.பி.ஐ வங்கியில் 1,422 பணிகளுக்கான வேலைவாய்ப்புகள்.. விண்ணப்பிக்கே இன்றே கடைசி நாள்.. கூடுதல் விவரம்...

எஸ்.பி.ஐ வங்கியில் ஆயிரத்து 422 பணிகளுக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கே இன்றே கடைசி நாள் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

Continues below advertisement

வங்கியில் பணிபுரிய வேண்டும் என்பது உங்கள் கனவா? இதோ உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு மாநிலங்களில் உள்ள ’Circle Based Officer' பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு நவம்பர் மாதம் 7-ஆம் தேதிக்குள்(இன்று) விண்ணப்பிக்க வேண்டும்.

Continues below advertisement

பணி விவரம்:

Circle Based Officer

மொத்த பணியிடங்கள்: 1422

பணியிடம்:

இந்தப் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், சிக்கிம், மகாராஷ்டிரம், கோவா, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளில் பணியமர்த்தப்படுவர்.

ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு மாதம் ரூ.36,000 முதல் ரூ. 63,840 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2022 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.  இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல், பட்டய கணக்காளர், மருத்துவம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கிரீனிங் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து பிரிவினரும் விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர்,  மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

எப்படி விண்ணப்பிப்பது:

https://sbi.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.11.2022

தேவையான ஆவணங்கள்:


 

தேர்வு முறை:


இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://sbi.co.in/documents/77530/25386736/17102022_Final+Advertisement.pdf/0399e3a4-4e16-af69-c270-f61c385d01a6?t=1666017092279  என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.

இந்நிலையில் இன்றே கடைசி நாள் என்பதால் உடனடியாக விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கவும்.

Also Read: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

Continues below advertisement