சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறைபாடு உடைய சிறப்பு மாணவர்களுக்கான பள்ளியில் பணி செய்ய உங்களுக்கு ஓர் வாய்ப்பு. அதுகுறித்த முழு விவரத்தை இக்கட்டுரையில் காணலாம்.


சேலத்தில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் கீழ்வருமாறு.


பணி விவரம்:


கணினி பயிற்றுநர் (Computer Tutor)


கல்வித் தகுதி:


பி.எட் தகுதியுடன் பி.இ (கணினி அறிவியல்) அல்லது பி.எஸ்.சி. (கணினி அறிவியல்) அல்லது பிசிஏ அல்லது பி.எஸ்.சி. (தகவல் தொழில்நுட்பம்) ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இந்த பணிக்கு விண்ணப்பிக்க 1.7.2022 அன்றின்படி, 35 வயது பூர்த்தியடைந்தவராக  இருக்க வேண்டும்.  இதற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதுவரம்பில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஊதிய விவரம் :


இதற்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.


எப்படி விண்ணப்பிப்பது?


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க சுயவிவர குறிப்புடன் தேவையான கல்வி சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:


 தலைமை ஆசிரியர்,


செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி,


சீனிவாசா காலனி,


சூரமங்கலம், சேலம் - 636005


விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணி வரை




மேலும் வாசிக்க..


Puthumai Penn Scheme: மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை : முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்..!