சென்னையில் உள்ள இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில்  வேலூர் மாவட்டத்தில் இராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 


வேலூர் மாவட்ட  விளையாட்டு மையத்தில் (District Sports Complex) வரும் 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை அக்னிவீர் (ஆண்) (“Agniveer (Men), அக்னிவீர் (பெண்கள் இராணுவ காவல் துறை ) (Agniveer (Women Military Police)), பாதுகாப்பு படை வீரர் பிரிவு செவிலியர் (Soldier Technical Nursing Assistant), கால்நடை துறையில் உதவி செவிலியர் (Nursing Assistant (Veterinary)), ஜூனியர் கமிசன்ட் அலுவலர் (Junior Commissioned Officer) மற்றும் Religious Teacher உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இராணுவ துறை வெளியிட்டுள்ளது. 


பணி விவரம்:


அக்னிவீர் (ஆண்)  (“Agniveer (Men),


அக்னிவீர் (பெண்கள் இராணுவ காவல் துறை ) (Agniveer (Women Military Police)),


பாதுகாப்பு படை வீரர் பிரிவு செவிலியர் (Soldier Technical Nursing Assistant),


கால்நடை துறையில் உதவி செவிலியர் (Nursing Assistant (Veterinary)),


ஜூனியர் கமிசன்ட் அலுவலர் (Junior Commissioned Officer) 


Religious Teacher


இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு முகாமிற்கு வருபவர்கள் தேவையான அனைத்து கல்வி சான்றிதழ்களையும் உடன் எழுத்து செல்ல வேண்டும். www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கூடுதல் விவரங்களை பெறலாம்.


தமிழ்நாடு வேலூரில் உள்ள போலீஸ் ஆட்சேர்ப்பு பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் இருந்து கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவ பணிக்கு விண்ணப்பித்தவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.


இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது உதவி தேவைப்பட்டால் விண்ணப்பதாரர்கள் சென்னை செயின்ட்  ஜார்ஜ் கோட்டையில்  இராணுவ துறையின் ஆட்சேர்ப்பு அலுவலகத்தை  தொடர்பு கொள்ளவும்.



தொலைபேசி எண் 044-25674924.


மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்த வேலைவாய்ப்பு முகாம் செயல்முறை முற்றிலும் தானியங்கி முறையில் நடைபெறுகிறது.  நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறும் என்றும் யாரேனும் தேர்ச்சி பெற அல்லது பதிவுசெய்ய உதவ முடியும் என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறி  ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம். தகுதி அடிப்படையிலேயே பணி வழங்கப்படும். 


அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு file:///C:/Users/jansi/Downloads/DIPR-P.R%20No.1902-%20Army%20%20Recruitment%20%20Rally%20Press%20Release-Date%2001.11.2022%20pdf%20(1).pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி


அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 


இதற்காக இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவீதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.