WALK IN INTERIVEW:


மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்துட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (Indian Institute of Information Technology, Design and Manufacturing) கணினி அறிவியல் பொறியியல் துறையில்  ( Departments of Computer Science and Engineering (CSE)) தற்காலிக பேராசிரியராக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த பணிக்கான நேர்காணல் நாளை (நவம்பர், 02,2022) நடைபெறுகிறது. இந்த பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது.


பணி விவரம்:


கணினி அறிவியல் பொறியியல் துறை 


தற்காலிக பேராசிரியர் பணியிடம் 


மொத்த பணியிடங்கள் - 45 


கல்வித் தகுதி:


இந்தப் பணி விண்ணப்பிக்க  கணினி அறிவியல்  துறையில் பி.டெக்., (B.Tech.,)  எம்.டெக்., (M.Tech.,) மற்றும் கணினி அறிவியல் துறையில் பொறியியல் படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் துறை தொடர்பான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


கணினி அறிவியல் பொறியியலில் முனைவர் பட்டம், ஆய்வு படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 


விண்ணப்பதாரர்கள் கம்யூட்டர் டிசைன்,  Algorithms, கம்யூட்டர் நெட்வோர்கஸ், ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ், Programming in C, தரவு அறிவியல்,  Human computer Interaction, Operating System மற்றும் Distributed systems ஆகியவைகள் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். பணி அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு.


ஊதிய விவரம்:


முனைவர் பட்டம் முடித்தவர்களுக்கு ரூ70,000 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.


முனைவர் பட்டம் இல்லாதவர்களுக்கு ரூ. 60,000 முதல் ரூ. 65,000 வரை ஊதியம் வழங்கப்படும்


நேர்காணல் நடைபெறும் தேதி - 02,நவம்பர், 2022 காலை 8.30 மணி முதல் 


கவனிக்க:


நேர்காணலுக்கு செல்பவர்கள் தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்களை எடுத்துச் செல்லவும்.


நேர்காணல் நடைபெறும் முகவரி:


Administration Section


Indian Institute of Information Technology Design and Manufacturing,


Kancheepuram


Melakkottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai-600 127


தொடர்பு எண்: 044-27476300/6313


மின்னஞ்சல் முகவரி-  recruit@iiitdm.ac.in


அதிகாரப்பூர்வ வலைதள முகவரி - www.iiitdm.ac.in


அறிவிப்பின் முழு விவரத்தை http://iiitdm.ac.in/img/Recruitment/2022/walk_in_advertisment-CSE_temporary_faculty.pdfஎன்ற லிங்கில் காணலாம்.