இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தடகளம், வில்வித்தை போன்ற

  26 பிரிவுகளின் கீழ் 220 உதவி பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கவும், அனைத்து இடங்களிலும் விளையாட்டுகளைப் பரப்பவும், கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் கடந்த 1984 ஆம் ஆண்டு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடங்கப்பட்டது. இங்கு தகுதியுள்ள பயிற்சியாளர்களால் பல இளைஞர்களின் திறமைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தகுதிவாய்ந்த உதவிப் பயிற்சியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





தடகளம், வில்வித்தை, குத்துச்சண்டை, பென்சிங், ஹாக்கி, ஜூடோ, பளுதூக்குதல், படகு, கால்பந்து, மல்யுத்தம் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 220 பணியிடங்கள் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விளையாட்டு உதவி பயிற்சியாளராக வேண்டும் என நினைப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற இந்திய, வெளிநாட்டு பலகலையில் டிப்ளமோ இன் கோச்சிங் அல்லது ஒலிம்பிக், சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது துரோணாச்சியர் விருதுபெற்றிருக்க வேண்டும் எனவும் விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை :


எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள், http://sportsauthorityofindia.nic.in/saijobs என்ற இணையதளத்திற்கு சென்று இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சம்பந்தப்பட்ட விளையாட்டுத் துறையில் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் தேர்வாகும் நபர்கள் விளையாட்டு உதவி பயிற்சியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும், மாதம் ரூ. 41,420 முதல் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 400 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு ஆண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வாகும் பயிற்சியாளர்கள் மேலும் இப்பணியில் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வமுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளவும்.





இந்தியாவில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பெங்களூரு, காந்திநகர், சண்டிகர், கொல்கத்தா, இம்பால், குவகாட்டி, போபால், இலக்னோ, சோனேபட் இடங்களில் அமைந்துள்ள ஒன்பது வட்டார மையங்களும் பாட்டியாலா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில்  இரண்டு விளையாட்டுத்துறை கல்வி நிறுவனங்களும் உள்ளன. மேலும் பாட்டியாலாவிலுள்ள நேதாசி சுபாசு தேசிய விளையாட்டுக் கழகத்திலும் பெங்களூரு, கொல்கத்தா போன்ற சில வட்டார மையங்களிலும் பயிற்றுநருக்கான கல்வியும் விளையாட்டு மருந்தியல் கல்வியும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக திருவனந்தபுரத்திலுள்ள இலட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்லூரியில் உடற்பயிற்சிக் கல்வியில் பட்ட, பட்டமேற்படிப்பு கல்வித்திட்டங்கள் நடத்தப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.