தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது காலியாக உள்ள 39 கிராம சுகாதார செவிலியர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப்பணியாளர்கள் சீனியாரிட்டி முறையில் தேர்வு செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. பின்னர்  கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைக்குத் தேவையாக அனைத்துப் பணியாளர்களையும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால், மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே பணியில் சேர முடியும் மற்றும் சில பணியிடங்களை நேரடியாக நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் அரசாணை வெளியானது.


இந்த  மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் , ஒரு உறுப்பினர் செயலர் மற்றும் 19 பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டுவரும் நிலையில் தற்போது தமிழக மருத்துவ வாரியத்தில் கிராம செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்த இங்கே தெரிந்துக்கொள்வோம்.



கிராம சுகாதார செவிலியர் பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் – 39


கல்வித்தகுதி – விண்ணப்பதாரர்கள் பட்டம் (Graduate) பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


தமிழ்நாடு மருத்துவப்பணியாளர் தேர்வு வாரிய ஆட்சேர்ப்பு 2022க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.


முதலில் விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கல்வித்தகுதி, வயது, முன் அனுபவம் போன்ற அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்துக்கொள்ளவேண்டும். இதோடு கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விபரங்களையும் பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும்.


முக்கியமாக விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் தவறில்லாமல் நிரப்ப வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம் :


OC பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தேர்வு முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு முழுவதும் எந்த மாவட்டத்திலும் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.


சம்பளம் :


தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூபாய் 19,500 முதல் ரூ. 62 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை  http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.