நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. இதற்கு வரும் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வேலைவாய்ப்பு தொடர்பான முழு விவரங்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot) பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், புதிதாக 9 ஆயிரம் பணியிடங்கள் வரை நிரப்பட உள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் முதன்முதலில் வெளியிட்ட அறிவிப்பில் (CEN No.02/2024) குறிப்பிடப்பட்டிருந்தது.

Continues below advertisement

பணி விவரம்

Technician Gr I Signal - 1092

Technician Gr III - 8052

மொத்த பணியிடங்கள் - 9144

கல்வி மற்றும் பிற தகுதிகள் 

  • கல்வித் தகுதி தொடர்பான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் அப்டேட்களை காணலாம்.
  • விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 36 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

 

ஊதிய விவரம்

Technician Grade – I (Signal) – Pay Level 5 ரூ.29200/-Technician Grade – III – Pay Level 2 ரூ.19900/-

தெரிவு செய்யப்படும் முறை 

ரயில்வே வாரியத்தின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் Certificate Verification முடித்தவுடன், Computer Based Test மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.rrbchennai.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைன் கணினி தேர்வு பாடத்திட்டம்

இணையதள விவரம்

இது தொடர்பாக எழும் சந்தேகங்கள் குறித்து அறிய  தொடர்ப்பு கொள்ள --இ-மெயில்: rrbhelp@csc.gov.in

தொடர்பு : 9592001188 (அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.)

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அறிய https://www.rrbchennai.gov.in/downloads/cen-022024/Detailed_CEN_02_2024_English.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

https://www.rrbapply.gov.in/#/auth/landing- என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.04.2024