கோவை மாவட்டம் மருதமலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் உபகோயிலில் உள்ள வெளித்துறை மற்றும் தொழில்நுட்ப பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


பணி விவரம்



  • டிக்கெட் விற்பனை எழுத்தர்

  • அலுவலக உதவியாளர்

  • காவலர்

  • திருவலகு

  • விடுதி காப்பாளர்

  • பலவேலை

  • ஓட்டுநர்

  • பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர்

  • மின் உதவியாளர் 

  • மினி பஸ் க்ளீனர்


உபகோயில், அருள்மிகு கரிவரதராஜபெருமாள் திருக்கோயில், வடவள்ளி



  • காவலர் 

  • திருவலகு 


மொத்த பணியிடங்கள் - 21


கல்வி மற்றும் பிற தகுதிகள்..



  • டிக்கெட் விற்பனை எழுத்தர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

  • அலுவலக உதவியாளர் பணிக்க விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • காவலர், திருவலகு, விடுதி காப்பாளர், பலவேலை, ஆகிய பணியிடங்களுக்கு தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். 

  • ஓட்டுநர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஓராண்டு ஓட்டுநர் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில் / குழாய் பணியாளர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

  • மின் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மின் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  • மினி பஸ் க்ளீனர் பணிக்கு 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டர் உத்தி பற்றி நன்கறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • இது விண்ணப்பிக்க இந்து மதத்தைச் சாந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

  • ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கல் அனுப்ப வேண்டும்.



ஊதிய விவரம் 



  • டிக்கெட் விற்பனை எழுத்தர் -ரூ.18,500-58,600/-

  • அலுவலக உதவியாளர் - ரூ. 15,900-50,400/-

  • காவலர் - ரூ. 15,900-50,400/-

  • திருவலகு - ரூ. 15,900-50,400/-

  • விடுதி காப்பாளர் - ரூ. 15,900-50,400/-

  • பலவேலை - ரூ. 15,700-50,000/-

  • ஓட்டுநர் - ரூ.18,500-58,600/-

  • பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர் - ரூ. 18,000-56,900/-

  • மின் உதவியாளர் - ரூ. 16,600-52,400/-

  • மினி பஸ் க்ளீனர் - ரூ. 15,700-50,000/-


உபகோயில், அருள்மிகு கரிவரதராஜபெருமாள் திருக்கோயில், வடவள்ளி



  • காவலர் - ரூ. 11,600-36,800/-

  • திருவலகு - ரூ. 10,000-31,500/-


வயது வரம்பு விவரம்


விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை


விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவி பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox Copy only) பெற்று அனுப்பப்பட வேண்டும். 


இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள https://marudhamalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி 05-04-2024