உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 32,438 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது.
முன்னதாக பிப்.22ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
தேர்வர்கள் https://www.rrbapply.gov.in/#/auth/landing என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
உதவியாளர், டிராக் மெஷின் உதவியாளர், பாயிண்ட்ஸ் மேன், தண்டவாள பராமரிப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முக்கியத் தேதிகள் என்ன?
ரயில்வேயில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களில் சேர்வதற்கு, ஜனவரி 23ஆம் தேதி அன்று விண்ணப்பப் பதிவு தொடங்கியது. பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மார்ச் 1 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை மார்ச் 3ஆம் தேதி வரை செலுத்தலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 4 முதல் 13 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
18 முதல் 36 வயது வரையிலான தகுதி வாய்ந்த தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை
ஒற்றை கணினி வழித் தேர்வு நடைபெறும். எனினும் தேர்வு முறையை மாற்றும் உரிமை ஆர் ஆர்பிக்கு உண்டு. தேர்வாகும் தேர்வர்களுக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்படும். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும் மருத்துவத் தேர்வும் நடைபெறும்.
எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு
தவறான பதில்கள் ஒவ்வொன்றுக்கும் 1/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள்: 0172-565-3333 மற்றும் 9592001188 (10:00 AM to 5:00 PM on all working days)
இ மெயில் முகவரி: rrb.help@csc.gov.in
கூடுதல் விவரங்களை https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_08_2024_level1.pdf என்ற இணைப்பின் மூலம் அறியலாம்.