மிஸ் பண்ணிடாதீங்க.. ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்; ஆர்ஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

குரூப்-டி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது NCVT-இலிருந்து தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.

Continues below advertisement

இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வேலை தேடுபவர்களுக்கு மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. அதாவது காலி இடங்களை நிரப்ப வைக்கப்படும் குரூப் டி தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தத் தேர்வு மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது.

Continues below advertisement

குரூப் டி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு அவகாசம் மார்ச் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பிரிவுகளில் காலி இடங்கள்?

இந்த RRB ஆட்சேர்ப்பு இயக்கத்தில் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, பொறியியல், மெக்கானிக்கல், S&T மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளில் உள்ள பணியிடங்கள் இதில் அடங்கும். இதில், போக்குவரத்துத் துறையில் 5,058 பாயிண்ட்ஸ்மேன்- பி பணியிடங்களும், பொறியியல் பிரிவில் 799 டிராக் மெஷின் உதவியாளர் பணியிடங்களும், 13,187 டிராக் மெயின்டெய்னர் கிரேடு IV பணியிடங்களும் உள்ளன. மேலும், உதவியாளர் (பிரிட்ஜ்) பணிக்கான 301 பணியிடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் உதவியாளர் (சி&டபிள்யூ) 2,587 காலியிடங்களும், உதவியாளர் (லோகோ ஷெட்-டீசல்) 420, உதவியாளர் (ஒர்க்ஷாப்) 3,077 பணியிடங்களும் நிரப்பப்படும்.

மின்துறையில் 1,381 உதவியாளர் டிஆர்டி மற்றும் 950 அசிஸ்டெண்ட் லோகோ ஷெட் (எலக்ட்ரிக்கல்) பணியிடங்கள் மற்றும் பிற பல்வேறு பணிகளுக்கான நியமனங்களும் செய்யப்படும். இந்த ஆட்சேர்ப்பில் ஒட்டுமொத்தமாக 32,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

என்ன தகுதி?

குரூப்-டி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது NCVT-இலிருந்து தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வரின் வயது ஜூலை 1, 2025 இன் படி 18 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க, பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும், அதில் ரூ. 400 கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) எழுதும்போது திருப்பித் தரப்படும். மறுபுறம், எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் திருநங்கைகள் ரூ. 250 செலுத்த வேண்டும், அவர்கள் தேர்வை எழுதினால் செலுத்திய தொகை,  முழுமையாகத் திரும்பப் அனுப்பப்படும்.

தேர்வு எப்படி?

கணினி அடிப்படையிலான தேர்வு (CBT-1),

உடல் திறன் தேர்வு,

ஆவண சரிபார்ப்பு,

மருத்துவ பரிசோதனை 

விண்ணப்பிப்பது எப்படி?

1. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.rrbcdg.gov.in/  பார்க்க வேண்டும்.

2: 'புதிய பதிவு' இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3: தேர்வுக்கு பதிவுசெய்து, பெயர், பிறந்த தேதி மற்றும் தந்தையின் பெயர், தாயின் பெயர், ஆதார் எண், SSLC/மெட்ரிக் பதிவு எண், தேர்ச்சி பெற்ற ஆண்டு, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி போன்ற தேவையான தகவல்களைச் சமர்ப்பித்து, பதிவுப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும். .

4: பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை OTP மூலம் சரிபார்க்க வேண்டும்.

5: பதிவு எண் மற்றும் பாஸ்வர்ட்டை பயன்படுத்தி முகப்புப் பக்கத்தில் உள்நுழையவும்.

6: பகுதி I மற்றும் பகுதி II க்கான விண்ணப்பத்தை நிரப்பவும்

7: விண்ணப்ப விவரங்களை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நெட் பேங்கிங்/கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/UPI மற்றும் ஆஃப்லைன் சலான் ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் பக்கத்திற்கு செல்லும்.

8: விண்ணப்பதாரர்கள் தேர்வின் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

9: விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையின் விவரங்களை நிரப்ப வேண்டும்.

10: கட்டணத்தைத் திரும்பப் பெற வங்கி விவரங்களை உள்ளிடவும்.

கூடுதல் விவரங்களுக்கு: மின்னஞ்சல்: rrb.help@csc.gov.in 

தொலைபேசி: 0172-565-3333 மற்றும் 9592001188    

Continues below advertisement
Sponsored Links by Taboola