அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


திட்ட உதவியாளர்


ப்ராஜக்ட் அசோசியேட்


ஆய்வக உதவியாளர் 


தொழில்நுட்ப உதவியாளர் UG II 


தொழில்நுட்ப உதவியாளர் PG II 


மொத்த பணியிடங்கள் - 4


அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு தொழில் கல்வி துறையின் கீழ் நடத்தப்படும் 'Decision Supporting System for Sustainable Bus Transport in Chennai' ஆய்வில் திட்ட உதவியாளராக பணியாற்ற வேண்டும். 
 
கல்வித் தகுதி:



  •  முதுகலை பொறியியல் பட்டம், எம்.டெக். படித்தவர்கள் அல்லது பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பி.டெக். தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், சிவில்,எலக்ட்ரிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.B. E / B. Tech  படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

  • போக்குவரத்து பொறியியல் அல்லது சிவில் இஞ்சினியரிங் துறையில் பட்டம் பெற்றவாராக இருத்தல் வேண்டும். 

  • ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல், தொடர்பியல் ஆகிய துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

  • தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பி.டெக்., பொறியியல் துறையில் இளங்கலை படித்திருக்க வேண்டும். 

  • Technical Assistant PG-II - விண்ணப்பிக்க Embedded System Technologies/ Control and Instrumentation Engineering/ Power Electronics and Drives/ ஆகிய துறைகளில் முதுகலை பொறியியல் பட்டம் அல்லது எம்.டெக். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:



  • Skilled Lab Assistant :Rs.200/Hour (PG) - (Restricted to 100hrs per month)

  • Technical Assistant(PG) - II :Rs.200/Hour (PG) - (Restricted to 100hrs per month)

  • Technical Assistant(PG) - II :Rs.250/Hour (PG) - (Restricted to 100hrs per month)

  • Project Assistant - ரூ.25,000/-


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


இதற்கு சுயவிவர குறிப்புடன் தேவையான நகல்களுடன்  hodeee@annauniv.edu / krkannan@annauniv.edu / kgunasekran@annauniv.edu -- என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.02.2025 / 27.02.2025


திட்ட உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிப்பது பற்றி https://www.annauniv.edu/events.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


பணி, விண்ணப்பிக்க கடைசி தேதி பற்றிய  விவரத்தை https://www.annauniv.edu/pdf/Recruitment_Skilled_Manpower_EEE.pdf / https://www.annauniv.edu/pdf/CMRG_PA_Recruitment_Civil_Transport.pdf  -என்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம்.