Recruitment at Ministry of Defence : ரூ.63,200/- சம்பளத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் லோயர் டிவிஷன் கிளார்க் (Lower Division Clerk) பணி காலியாக உள்ளது. அந்த பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு இரண்டு இடம் மட்டுமே காலியாக உள்ளது. லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு பணிநியமனம் செய்யப்படும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200/- வரை ஊதியம் அளிக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு பள்ளி அல்லது அரசாங்கத்தால் அங்கீகாரகிப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பற்றி மேலும் அறிய mod.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். தட்டச்சு செய்யும் திறன் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும். ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்ய கூடிய திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 29, 2022. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு mod.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். விதிமுறைகளை முழுமையாக படித்து பார்த்த பிறகு குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி விண்ணப்ப படிவத்தை விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த பிறகு இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆவணங்களின் நகலை இணைத்து தபால் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விதிமுறைகளின் படி விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்