High Court Jobs: தமிழ்நாடு மக்களுக்கு ஒரு இன்பச் செய்தி... உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்பு 


சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்களை குறித்த தகவல் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் இந்த பதிவில் பகிரப்பட்டுள்ளது.  


தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் Reader /Examiner /Junior Bailiff/ Senior Bailiff// Process Server / Xerox Operator/ Process Writer/ Driver / Lift Operator உள்ளிட்ட பணியிடங்களுக்கு பணி நியமன செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை அறிய உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். 


விண்ணப்பிக்கும் தேதி: உயர் நீதிமன்றத்தின் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள்  24-07-2022 முதல் 22-08-2022 வரை என குறிப்பிடப்பட்டுள்ளது. 



இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?


இணையதளம் மூலம் உயர் நீதிமன்றத்தின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் எப்படி விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்ப படிவத்தை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் போன்ற தகவல்களையும் வழிமுறைகளையும் முழுமையாக படித்து முடித்த பிறகே விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 


உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்திற்குள் நுழைந்த உடன் "Click here to apply" என்ற இணைப்பின் மூலம் உள்நுழைந்த பிறகு அறிக்கை 1 மற்றும் அறிக்கை 2 என இரு அறிக்கைகள் திரையில் தோன்றும். அதில் உங்களின் அறிக்கை எது என தேர்ந்தெடுத்து அதை கிளிக் செய்யவும். 


திரையில் தோன்றும் நீதித்துறை மாவட்டத்தின் பட்டியலில் இருந்து உங்களின் மாவட்டத்தை தேர்வு செய்யவும். ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்டங்களை தேர்வு செய்ய இயலாது. அதனால் மாவட்டத்தை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யவும். பிறகு விண்ணப்பம் செய்வதற்கு தேவையான பொதுவான அறிவுரைகள் திரையில் தோன்றும். விண்ணப்பதாரர்களின் விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம் அல்லது தமிழ் அறிக்கையை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


புதிதாக நுழைவோர் Registration - New users பட்டனை கிளிக் செய்யவேண்டும். முன்கூட்டியே பதிவு செய்து வைத்துள்ளவர்கள் "Apply Online" பட்டனை கிளிக் செய்யலாம். 


புதிதாக பதிவு செய்வோர் தங்களின் அடிப்படை தகவல்களை பதிவு செய்து முடித்த சமர்ப்பித்த பிறகு ஒரு யூசர் ID மற்றும் பாஸ்வோர்ட் உருவாக்கப்படும். அதை பயன்படுத்தி விண்ணப்பப் படிவத்திற்குள் நுழைய வேண்டும். பிறகு விண்ணப்ப படிவத்தை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணமாக ரூ. 60+tax செலுத்தினால் மட்டுமே பதிவு நிறைவடையும். 


விண்ணப்ப படிவத்தில் உள்ளவை:


விண்ணப்ப படிவத்தில் சுய விவரங்கள், புகைப்படம் பதிவேற்றம் , கல்வித்தகுதி, தொழில்நுட்ப தகுதி, கையொப்பம் பதிவேற்றம் , சான்றிதழ்கள் பதிவேற்றம் , கட்டண பிரிவு, முன்னோட்டம், உறுதி மொழி, இதர விவரங்கள் ஆகியவற்றை பதிவு செய்த பிறகு சமர்ப்பிக்கவேண்டும். பிறகு விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  


விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு வேறு ஏதேனும் பதவிகளுக்கு அதே மாவட்டத்தில் சமர்ப்பிக்க விரும்பினால் முகப்பு பகுதியில் இருக்கும் APPLY POSTஐ கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.