அரசு நிறுவனமான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் ஃபெர்ட்டிலைசர் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட்:

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனமானது, மும்பையை தளமாகக் கொண்ட இரசாயன மற்றும் உரங்களை உற்பத்தி செய்யும் ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனமானது, இந்தியாவில் உர உற்பத்தியில் நான்காவது பெரிய நிறுவனமாகும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: Management Trainee(Civil, Mechanical, Boiler)

மேலும் பணி குறித்த கூடுதல் மற்றும் விரிவான தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிக்கியை பார்க்கவும்.

கல்வித்தகுதி: பொறியியல் பட்டப்படித்து இருக்க வேண்டும்*.

பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. இது குறித்தான தகவல்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

சம்பளம்: ரூ.  Rs. 40,000 - 140,000. / மாதம் 

வயது: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மற்றும் நேர்காணல் வழியாக

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்-22

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் Rashtriya Chemicals and Fertilizers Limited (rcfltd.com)  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பணி குறித்த அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிக்க விரும்புவோர், பணி குறித்த விரிவான அறிக்கையை, தெளிவாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்ப அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதே, அதிகாரப்பூர்வமானதாகும். அறிக்கைக்கு DETAILED ADVERTISMENT AS ON 01_08_2022.pdf (rcfltd.com) என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண