மத்திய அரசின் ராஷ்ட்ரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனத்தில் (Rashtriya Chemicals and Fertilizers Limited ) 'Operator Trainee' பணிகளுக்கு உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிரேட்- 2 பிரிவு அடிப்படையில் இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
இப்பணியிடங்களுக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பயிற்சி காலம் 1 வருடத்திற்குப் பின்பு சம்பள உயர்வு அளிக்கப்படும்.

பணி விவரம்:
Opterator Trainee
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் வேதியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
National Council of Vocational Training (NCVT)- இல் இருந்து சான்றிதழ் படிப்புகள் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 34 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள அறிவிப்பின் முழு விவரத்தில் காணவும்.
ஊதிய விவரம்:
இந்தப் பயிற்சி காலத்தின்போது, மாத ஊதியமாக 22 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.60 ஆயிரம் வரை வழங்கப்படும்.
பிற தகுதிகள்:
இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை படிப்பில் 50 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
இரண்டாண்டு பணி அனுபவம் இருப்பது சிறந்தது.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு மற்று திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணிகளுக்கு https://www.rcfltd.com/-என்ற இணையத்தளத்தில் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/rcfdec22/- என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16.01.2023.
கூடுதல் விவரங்களை https://www.rcfltd.com/files/Operator%20(Chemical)%20Trainee%20-%20Advertisement.pdf-என்ற இணைப்பை கிளிக் செய்து காணலாம்.
இதையும் படிங்க..