இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது 256 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் ஜனவரி 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Continues below advertisement


பணி குறித்த கூடுதல் விவரம்


காலி பணியிடங்கள்


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் (Assistant), ஜூனியர் பர்சனல் அசிஸ்டென்ட் ( Junior Personal Assistant), ஸ்டெனோ (Stenographer) மற்றும் யுடிசி (UDC) ஆகிய 526 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


உதவியாளர் (Assistant) - 342


ஜூனியர் பர்சனல் அசிஸ்டென்ட் ( Junior Personal Assistant) - 154


ஸ்டெனோ (Stenographer) - 14


யுடிசி (UDC) - 16


கல்வித்தகுதி


உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதியானது  குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு மற்றும் கணினி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஜூனியர் பர்சனல் அசிஸ்டென்ட் ( Junior Personal Assistant), ஸ்டெனோ (Stenographer) பணிகளுக்கு  குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு அல்லது  வணிக படிப்பில் டிப்ளமோ மற்றும் குற


குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு அல்லது குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் வணிக/செகரட்டரியல் பயிற்சியில் டிப்ளமோ மற்றும் குறைந்தபட்ச வேகம் ஆங்கில ஸ்டெனோகிராஃபியில் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யலாம். https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2022_Dec/Advt.Asst.JPA.2022.Website.Bilingual.pdf


வருமானம்


இந்த மேற்கண்ட பணிகளை பொறுத்து வருமானம் ஆனது வேறுப்படும். தோராயமாக மேற்கண்ட பணிகளுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.25,000 இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யலாம். https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2022_Dec/Advt.Asst.JPA.2022.Website.Bilingual.pdf


வயது விவரம்


இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 28 வரை இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யலாம். https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2022_Dec/Advt.Asst.JPA.2022.Website.Bilingual.pdf


விண்ணப்பிக்கும் முறை



  • விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் Home - https://www.isro.gov.in/

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்

  • தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும்

  • இறுதியாக முழு விண்ணப்பம் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்.



விண்ணப்ப கட்டணம்


இந்த மேற்கண்ட விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி 


இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 09ஆம் தேதி கடைசி நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யலாம். https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2022_Dec/Advt.Asst.JPA.2022.Website.Bilingual.pdf