பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமுள்ள பட்டதாரிகள் வருகின்ற டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் தரமான மற்றும் தடையில்லா மின்சாரம் மலிவான விலையில்  நுகர்வோர்க்கு வழங்குவதன் நோக்கத்தோடு செயல்பட்டுவருகிறது. மேலும் தமிழக அரசின் மின்நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்னென்ன தகுதி? உள்ளது என அறிந்துகொள்வோம்.

உதவி மேலாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடம் – 1

கல்வித்தகுதி - CA/CWA படித்திருக்க வேண்டும். இதோடு 5 ஆண்டு பணி முன் அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.56,100 – 1,77,500

தனி உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடம் – 1

கல்வித்தகுதி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

மேலும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் - ரூ.36,200 – 1,14,800

இளநிலை மேலாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடம் – 1

கல்வித்தகுதி - CA/CWA படித்திருக்க வேண்டும். இதோடு 3 ஆண்டு பணி முன் அனுபவம் அவசியம்.

சம்பளம் -  ரூ.35,400 – 1,12,400

இளநிலை உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 2

கல்வித்தகுதி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் - ரூ.19,500 – 62,000

வயது வரம்பு :

மேற்கண்ட அனைத்துப்பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

BC/MBC/OBC பிரிவினருக்கு 32 வயது வரையிலும், SC/ST பிரிவினருக்கு 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்துப்பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.tnpowerfinance.com/tnpfc-web/home என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள சுய விபரம் மற்றும் அனைத்துக் கல்விச்சான்றிதழ்களையும் இணைத்து மின்னஞ்சல் அல்லது அஞ்சல் வாயிலாக கீழக்கண்ட முகவரிக்கு வருகின்ற டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Chief Financial Officer,

490/3-4, “TUFIDCO POWERFIN” Tower,

 Anna Salai, Nandanam,

Chennai – 600035.

மின்னஞ்சல் முகவரி : cfo@tnpowerfinance.com

எனவே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிய வேண்டும் என்று  நினைப்பில் உள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.