தேசிய ஊட்டச்சத்துக் குழுமத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்தக் குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், டிகிரி முடித்த இளைஞர்கள் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊட்டச்சத்துக்குழுமத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதி? என இங்கு தெரிந்துக்கொள்வோம்.
Financial Management specialist பணிக்கானத் தகுதிகள் :
காலிப்பணியிடம்: 1
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 65க்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சிஏ, சிஎஸ், சிஎம்ஏ அல்லது எம்பிஏ (MBA finace) பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதோடு 3 ஆண்டுகள் பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Accountant பணிக்கானத் தகுதிகள் :
காலிப்பணியிடங்கள் : 2
சம்பளம் – மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம் நிர்ணயம்.
கல்வித்தகுதி- வணிகவியல், கணிதவியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் அல்லது CWA-inter/CA
Project Associate பணிக்கானத் தகுதிகள் :
வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
கல்வித்தகுதி : கணினி அறிவியல் அல்லது ஐடி பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் – ரூ.25 ஆயிரம்
Secretarial Assistant /Data Entry பணிக்கானத் தகுதிகள் :
காலிப்பணியிடம் -1
வயது வரம்பு – 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி – ஏதாவதொரு பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
District co – ordinators பணிக்கானத் தகுதிகள் :
காலிப்பணியிடம் -1
வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி – ஏதாவதொரு பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ அல்லது ஐடி முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் – மாதம் ரூ. 15 ஆயிரம்
இதேப்போன்று District project assistants, Block co oridnators, Block Project Assistants ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் இளைஞர்கள் https://www.icds.tn/gov/in என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப்பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு பணிக்கும் கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் அதனைக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு ரிஜிஸ்டர் போஸ்ட் அல்லது ஸ்பீடு போஸ்ட்வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Director Cum mission Director,
Integrated Child development project scheme,
No1. Pammal Nalltambi Street,
M.G.R Road,
Taramani,
Chennai – 113
தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Notification.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.