புதுச்சேரி மின்சாரத்துறையில் காலியாக உள்ள 45 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.
அரசுப்பணியோ அல்லது தனியார் நிறுவனப்பணியோ? ஏதாவதொன்றில் சேர்ந்துப் பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். இந்நிலையில் தான் இவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக தற்போது புதுச்சேரி அரசிடம் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டதாரிகளா? நீங்கள் இருந்தால் புதுச்சேரி மின்சாரத்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நேரத்தில் எப்படி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்கும் முறை என்ன? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
புதுச்சேரி இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள் – 45
கல்வித்தகுதி:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.
இதோடு டிப்ளமோ முடித்தவர்கள் 3 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 31.02.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வெண்டும் என்றால் முதலில், http://recruitment.py.gov.in/ என்ற இணையதளப்பக்கத்திற்குள் செல்ல வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஹஹகல்வி, வயது வரம்பு, பணி முன்அனுபவம் போன்ற அனைத்து விபரங்களையும், சரியாகப் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டும்.
இறுதியில் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து இப்பணிக்கு தேவையான அனைத்து கல்வி, வயது வரம்பிற்கானச் சான்றிதழ்களின் நகல்களில், சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Superintending Engineer-cum-HoD,
Electricity Department,
No.137, N.S.C Boss Road,
Puducherry – 605 001.
ஆன்லைனில் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 18,2022
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் வந்து சேரவேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 25, 2022
தேர்வு செய்யும் முறை:
மேற்கணட முறைகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://recruitment.py.gov.in/recruitment/je2022/instructions என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.