ராஜ்ய சபா செயலகத்தில் காலியாக உள்ள தனிப்பட்ட உதவியாளர் மற்றும் இதர பணிகள் என மொத்தம் 110 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் மே 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


மத்திய அரசுப்பணியில் சேர்ந்துப்பணியாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது? எப்போது அறிவிப்பு வரும்? என்ற அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தான், தற்போது  ராஜ்யசபா செயலகத்தில் தனிப்பட்ட உதவியாளர் உள்ளிட்ட இதர பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.





ராஜ்யசபா செயலகத்தில் தனிப்பட்ட உதவியாளர் மற்றும்  இதர பணிக்கானத் தகுதிகள்:


மொத்த காலிப்பணியிடங்கள் – 110


துறை வாரியாக காலிப்பணியிடங்கள்:


உதவி ஆராய்ச்சி/குறிப்பு அதிகாரி ( லெவல் 8 பே மெட்ரிக்ஸ்) – 3


மொழிப்பெயர்ப்பாளர் ( லெவல் 8 பே மெட்ரிக்ஸ்) – 15


அலுவலகப்பணி உதவியாளர் ( லெவல் 4 பே மெட்ரிக்ஸ்) – 12


லெஜிஸ்லேட்டிங்/ கமிட்டி/ எக்ஸிகியூட்டிவ்/ புரோட்டோகால் அதிகாரி (லெவல் 10 பே மெட்ரிக்ஸ்) – 12


அசிஸ்டெண்ட் லெஜிஸ்லேட்டிவ் கமிட்டி/ எக்ஸிகியூட்டிவ்/ புரோட்டோகால் அதிகாரி (லெவல் 10 பே மெட்ரிக்ஸ்) - 26


செயலக உதவியாளர் (லெவல் 6 பே மெட்ரிக்ஸ்) : காலி இடங்கள் – 27


கல்வித்தகுதி:


பணிக்கு ஏற்றவாறு கல்வித்தகுதிக் கொண்டிருப்பதோடு, 5-8 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


விண்ணப்பிக்கும் முறை:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ராஜ்யசபாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான rajyasabha.nic.in -க்கு சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக  தேவையான ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


“Director (Personnel), Room no 240,


2nd floor, Rajya Sabha Secretariat,


Parliament of India,


 Parliament House Annexe,


 New Delhi- 110001”


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி- மே 2, 2022.


 எனவே ஆர்வமுள்ள நபர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://rajyasabha.nic.in/rsnew/deputation_Advt_2022.pdf அல்லது https://rajyasabha.nic.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.