2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
அதில் குரூப்-2 தேர்வுக்கான பிரதான தேர்வு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி(TNPSC) தெரிவித்துள்ளது. மேலும், குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை நவம்பர் மாதம் வெளியாகும் எனவும் , காலி பணியிடங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
2022ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.
இதையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வுகள் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இந்நிலையில் அடுத்த கட்ட தேர்வான பிரதான தேர்வு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை, அடுத்த வருடம் நவம்பர் மாதம் வெளியாகும் எனவும், காலி பணியிடங்கள் குறித்தான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து தேர்வுகள் குறித்தான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் https://www.tnpsc.gov.in/static_pdf/annualplanner/2023_ARP_Planner_15_12_2022.pdf
TNPSC Fisheries: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக மீன்வளத் துணை ஆய்வாளர் பதவியை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
TNPSC Fisheries: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக மீன்வளத் துணை ஆய்வாளர் பணி குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் காலியாக உள்ள 24 பணியிடங்களை நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி இடங்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்தெடுக்கப்படும் தமிழக மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கு 24 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
- மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கு தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தால் மற்றும் பயிற்சி வாரியத்தால் கொடுக்கப்படும் மீன்வளத் தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவலில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விலங்கியலை (Zoology) முதன்மை பாடமாக கொண்டு degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மீன்வள அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தமிழக மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க நவம்பவர் 11-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது
தமிழக மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கான வயது பிரிவினருக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனவே பணி குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்
வருமானம்
தமிழக மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூ.35,900-11,3500 வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
- முதலில் TNPSC என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் Fisheries department jobs 2022 என்றதை கிளிக் செய்ய வேண்டும்
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்ப கட்டணம்
தமிழக மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150 மற்றும் அந்த பணிக்கான தேர்வுக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதார்கள் கணினி முறை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் மீன்வளத்துறையில் பணிபுரிய வேண்டும் என்று ஆசையில் இருப்பவர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பின் வாயிலாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.