விழுப்புரம் மற்றும் கடலூரில் நாளை (மே 27) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள்  தெரிவித்துள்ளனர். இது குறித்து கடலூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. தகுதியின் அடிப்படையில், பத்தாம் வகுப்பு,பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொது செவிலியம் மற்றும் மருத்துவப் பணி (ஏ.என்.எம், ஜி.என்.எம்), டிப்ளமோ நர்சிங், பி.இ படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுபயன்பெறலாம்.


இதே போல், விழுப்புரத்திலும் நாளை மறுநாள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும், காலாண்டிற்கு ஒருமுறை மாபெரும் வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட பல முன்னணி நிறுவனங்கள் கலந்துக்கொண்டு 2000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுகான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.




இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மனுதாரராக தங்களது கல்வித்தகுதி விவரங்களை பதிவு செய்து கொள்ளவும். மேலும் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயகுறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன்முகாமில் கலந்து கொண்டுபயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களை அறிய 04146-226417 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவும்  ரத்து செய்யப்படமாட்டாது.


விழுப்புரம் : மீண்டும் ஒரு ஜெய்பீம் பாணி வழக்கு : பொய் வழக்கு பதிவுசெய்த காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண