இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஒ. என்.ஜி.சி நிறுவனத்தில் காலியாக உள்ள 3614 அப்ரண்டிஸ் பணியிடங்களை விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இந்தியாவின் முதன்மையான எரிசக்தி நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்  நிறுவனம் தான் ஒ.என்.ஜி.சி (ONGC). இந்நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது 3,614 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.


OGNC நிறுவனத்தின் காலிப்பணியிட விபரங்கள்:


மொத்த காலிப்பணியிடங்கள் - 3614


துறைவாரியாக காலிப்பணியிட விபரங்கள்


Accounts Executive


Office Assistant


Secretarial Assistant


Computer Operator and Programming Assistant (COPA)


Draughtsman (Civil)


Electrician


Electronics Mechanic


Fitter


Instrument Mechanic


Information & Communication Technology System Maintenance (ICTSM)


Laboratory Assistant (Chemical Plant)


Machinist


Mechanic (Motor Vehicle)


Mechanic Diesel


Medical Laboratory Technician (Cardiology and Physiology)


Medical Laboratory Technician (Pathology)


Medical Laboratory Technician (Radiology)


Refrigeration and Air Conditioning Mechanic


Surveyor


Welder


Civil


Computer Science


Electronics & Telecommunication


Electrical


Electronics


Instrumentation


Mechanical  


கல்வித் தகுதி


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Accounts Executive, Office Assistant Bachelor’s பணியிடங்களுக்கு Degree in Commerce (B.Com)/ B.A or B.B.A படித்து முடித்திருக்க வேண்டும்.


Laboratory Assistant (Chemical Plant) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.Sc படித்திருக்க வேண்டும்.


Secretarial Assistant பணியிடங்களுக்கு Stenography (English) முடித்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதோடு Computer Operator and Programming Assistant (COPA), Draughtsman (Civil), Electrician, Electronics Mechanic, Fitter, Instrument Mechanic, Information & Communication Technology System Maintenance (ICTSM), Machinist, Mechanic (Motor Vehicle), Mechanic Diesel, Medical Laboratory Technician (Cardiology and Physiology), Medical Laboratory Technician (Pathology), Medical Laboratory Technician (Radiology), Refrigeration and Air Conditioning Mechanic, Surveyor, Welder ஆகிய பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ படித்து முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், https://www.apprenticeshipindia.gov.in/ அல்லது https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி – மே 15, 2022


தேர்வு செய்யும் முறை:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விபரம்:


பட்டதாரி பணியிடங்களுக்கு ரூ. 9 ஆயிரம்.


ஐடிஐ பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு  முதலாம் ஆண்டு ரூ. 7,700, இரண்டாம் ஆண்டு ரூ. 8,050 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டிப்ளமோ பணியிடங்களுக்கு ரூ. 8,000 என நிர்ணயம்.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://ongcindia.com/wps/wcm/connect/41e15bb5-21b3-4503-831c-212287ba05ac/NAPS2022-23.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-41e15bb5-21b3-4503-831c-212287ba05ac-o1Gdj1b என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.