ITI, டிப்ளமோ பாஸா? மத்திய அரசில் 276 காலிப்பணியிடங்கள்.. அப்ளை பண்ணிடுங்க!

விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் எழுத்துத்தேர்வும் நடைபெறும். இதில் தேர்வாகும் நபர்கள் அடுத்தப்படியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்திய தரநிலை பணியகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள 276 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

Continues below advertisement

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகம் அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பு தான் இந்திய தரநிலைகள் பணியகம். இதன் மூலம் அனைத்துப்பொருள்களின் தரநிலைப்படுத்தல், தயாரிப்பு மற்றும் அமைப்பு சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் ஹால்மார்க்கிங், ஆய்வக சோதனைப் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது 276 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

இந்திய தரநிலை பணியகத்தில் காலிப்பணியிட விபரங்கள்:

Director (Legal) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள்-1

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதந்தோறும் ரூ. 78,800 – 2,09,200 என நிர்ணயம்.

Assistant (Computer Aided Design) பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் - 2

கல்வித் தகுதி : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்  விண்ணப்பதாரர்கள் Bachelor‘s Degree in Science with Auto CAD. மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதந்தோறும் ரூ. 35,400 – 1,12,400 என நிர்ணயம்.

Stenographer பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் - 22

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :  விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதந்தோறும் ரூ. 25,500 – 81,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Senior Secretariat Assistant பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் - 100

கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதோடு தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,500 – 81,100

Senior Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 25 (Carpenter – 6, Welder – 2, Plumber – 3, Fitter – 3, Turner – 5, Electrician – 6)

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :  இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதந்தோறும் ரூ. 25,500 – 81,100

இதோடு Assistant Director (Hindi), Assistant Director (Administration & Finance), Assistant Director (Marketing & Consumer Affairs), personal assistant ,Assistant Section Officer போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், https://ibpsonline.ibps.in/bisrvpmar22/ அல்லது https://www.bis.gov.in/index.php/advertisement-for-various-posts-in-bisadvertisement-no-2-2022-estt/  என்ற இணையதளப்பக்கத்தின் மூலமான ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – மே 9, 2022

விண்ணப்பிக்க கட்டணம் – பொதுப்பிரிவினர் ரூ. 500, எஸ்சி மற்றும் எஸ்சி பிரிவினருக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு எவ்வித விண்ணப்பக்கட்டணமும் இல்லை.

தேர்வு முறை:

மேற்கண்ட முறைகளில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் எழுத்துத்தேர்வும் நடைபெறும். இதில் தேர்வாகும் நபர்கள் அடுத்தப்படியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://www.bis.gov.in/wp-content/uploads/2022/04/Final-English-16-Apr-2022-2-files-merged.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola