தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திலிருந்து 218 எக்ஸ்ரே டெக்னீசியன் மற்றும் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்கள் பிப்ரவரி 28க்குள் விண்ணப்பிக்கவும்.


இன்றைய சூழலில் பெரும்பாலான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் தெரிந்தவர்கள் என்று எண்ணி வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறோம் என ஏமாந்துவிடுகிறார்கள். எனவே இதுப்போன்று நடப்பதைத் தவிர்க்கும் வகையில், கடந்த 1978 ஆம் ஆண்டு தமிழக அரசு, தமிழக அரசின் வெளிநாட்டு மனித வள மேம்பாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கியது. இதன் மூலம் பாஸ்போர்ட் சேவையை பெறுவது முதல் பெரும்பாலான மக்கள் பல்வேறு பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிவதற்கு இந்நிறுவனம் உதவிபுரிந்துவருகிறது.


இதோடு வெளிநாடுகளில் என்னென்ன பணிகள் காலியாக உள்ளது? எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் அனைத்தும் தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வெளியாகும். அதன் படி, தற்போது குவைத்தில் எக்ஸ்ரே டெக்னீசியன் மற்றும் லேப் டெக்னீசியன் என 218 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து விரிவாக அறிந்துக்கொள்ளலாம்.





தமிழக அரசின் வெளிநாட்டு நிறுவனப் பணிக்கானத் தகுதிகள்:


மொத்த காலிப்பணியிடங்கள் – 218


கல்வித்தகுதி:


அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.sc Paramedical Technicians lab technical முடித்திருக்க வேண்டும்.


சம்பந்தப்பட்ட துறைகளில் 2 ஆண்டுகள் பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


 ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், www.omcmanpower.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


முன்னதாக விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட், பணி முன் அனுபவ சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும்.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு Zoom interview நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம்:


தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ. 74 ஆயிரம் என நிர்ணயம்.


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தங்கும் இடம், விமான பண சீட்டு, உணவு போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.omcmanpower.com/jobInfo.php?jid=240 என்ற இணையதளத்தின் வாயிலாக  முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.