இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 80 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இந்தியா நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளில் ஒன்றாக இந்திய விமானப்படையும் அதன் பங்களிப்பை செம்மையாக அளித்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, சீனா ரஷ்யாவுக்கு அடுத்தாற்போல் உலகின் நான்காவது வலிமையான விமானப்படையாக இந்திய விமானப்படை இயங்கி வருகிறது.  போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என சுமார் 14 ஆயிரம் விமானங்கள் இந்திய விமானப்படையின் வசம் உள்ளது. இதோடு இந்திய விமானப்படையில் பல்வேறு துறைகளின் கீழ் சுமார் 1,70,000க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப்படையின் கீழ் பணியாற்றி வருகின்றனர். அவ்வப்போது இந்திய விமானப்படையில் சில துறைகளின் கீழ் அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகும். பல்வேறு தேர்வுகளின் மூலம் அப்ரண்டிஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சில சமயங்களில் பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.


இந்நிலையில் தான் தற்போது இந்திய விமானப்படையில் 80 அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தாலே போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை? விண்ணப்பிக்க கடைசி தேதி ? என்ன என நாமும் இங்கே அறிந்துக்கொள்வோம்.




இந்திய விமானப்படையில் அப்ரண்டிஸ் பணிக்கானத் தகுதிகள்:


மொத்த பணியிடங்கள் – 80


கல்வித்தகுதி:


அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இப்பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில்  50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஐடிஐ முடித்தவர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 14 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு  வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.apprenticeshipindia.gov.in/%20Read%20more%20at:%20https: என்ற இணையதளத்தின் மூலம் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விபரம்:


இந்திய விமானப்படையில் அப்ரண்டிஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 7,700 வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே இந்திய விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் உள்ள உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10802_38_2122b.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்