நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இங்குள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது என்.எல்.சியில் 300 பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே இப்பணிகளுக்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.



பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர் (Graduate Executive Trainee) பணிக்கானத் தகுதிகள்:


மொத்த காலிப்பணியிடங்கள் : 300


Mechanical Engineering – 117


Electrical & Electronics Engineering – 87


Civil Engineering – 28


Mining Engineering – 38


Geology Engineering – 6


Control & Instrumentation Engineering – 5


Chemical Engineering – 3


Computer Science and Engineering – 12


Industrial Engineering – 4


கல்வித்தகுதி:


மேற்கண்ட பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Degree in Engineering or Technology முடித்திருக்க வேண்டும்.


மேலும் 2022 ஆம் ஆண்டில் GATE தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 01.03.200 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.nlcindia.in/new_website/index.htm அல்லது https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக்கட்டணம் :


பொதுப்பிரிவினருக்கு ரூ.854, மற்றும் எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.354 விண்ணப்பக்கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஏப்ரல் 11, 2022


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம்: மாதந்தோறும் ரூ. 50,000  முதல் 1,60,000 என நிர்ணயம்.


எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://www.nlcindia.in/new_website/careers/advt/GET-MAR-2022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளுங்கள்.