தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 93 சமூக பாதுகாப்பு அலுவலர் அல்லது மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் என்பது சமூகப்பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த பல்நோக்கு நலத் திட்டமாகும். இதன் மூலம்  தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தின் கீழ்,  விவரிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு அவ்வப்பொழுது நேரிடும் உடல்நலக் குறைபாடு, பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு, வேலை செய்யும் போது விபத்தினால் ஏற்படும் தற்காலிகமான அல்லது நிரந்தரமான ஊனம் மற்றும் மரணம் போன்ற அனைத்திற்கும் உரிய மருத்துவச்சேவை வழங்குகிறது. இந்த தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது சமூக பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





சமூக பாதுகாப்பு அலுவலர் பணிக்கானத் தகுதிகள்:


 மொத்த காலிப்பணியிடங்கள் – 93


கல்வித்தகுதி:


விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதோடு கணினி பயன்படுத்த தெரிந்திருக்கவேண்டும்.


வயது வரம்பு :


12.04.2022 அன்று 21 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.esic.nic.in/recruitments அல்லது  https://ibpsonline.ibps.in/esicssomar22/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 12, 2022


விண்ணப்பக்கட்டணம்:


SC/ST, பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளுக்கு ரூ 250


பொது மற்றும் OBC பிரிவைச்சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு  ரூ.500 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது முதல்நிலை, முதன்மைத்தேர்வு மற்றும் கணினி அறிவு மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வு என 3 பகுதியாக நடைபெறவுள்ளது.


இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு அலுவலராக பணி அமர்த்தப்படுவார்கள்.


சம்பளம் : மாதம் ரூ. 44,900 – 1,42,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://www.esic.nic.in/attachments/recruitmentfile/137aadcd28fca627bf24b12befd88720.pdf  என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.