நெய்வேலி இந்தியா லிமெடெட் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள ’Nurses and Paramedics’ பணி இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காலியாக உள்ள 103 பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே காணலாம்.


பணி விவரம்



  • ஆண் செவிலியர் உதவியாளர் - 36 

  • பெண் செவிலியர் உதவியாளர் - 22 

  • மகப்பேறு உதவியாளர் - 05 

  • ஆயுர்வேதம் உதவியாளர் - 04 

  • ரேடியோகிராபர் - 03 

  • லேப் டெக்னீஷியன்  - 04 

  • டயாலிசிஸ் டெக்னீஷியன் - 02 

  • அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் - 05 

  • பிசியோதெரபிஸ்ட்  - 02 

  • செவிலியர்கள் - 20 


மொத்தம் பணியிடங்கள் -103 


கல்வித் தகுதி 


மேற்கண்ட பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வித்தகுதியான அந்தந்த பணிகேற்பு மாறுப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.nlcindia.in/new_website/careers/Engagement%20of%20Nurses%20&%20Paramedics%20notification%20may%202023.pdf


வயது வரம்பு விவரம்


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.. இந்த வயது வரம்பானது அந்தந்த பணிகளுக்கு ஏற்ப மாறுப்படும். இதனால் கூடுதல் விவரங்களை இந்த லிங் மூலம் அறிந்து கொள்ளுங்கள். https://www.nlcindia.in/new_website/careers/Engagement%20of%20Nurses%20&%20Paramedics%20notification%20may%202023.pdf


ஊதிய விவரம்:


இப்பணிகளுக்கு வருமானம் பணியின் அடிப்படையில் ரூ.25,000 முதல் ரூ.36,000 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை


இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 100 வினாக்கள் இடம்பெறும். இதற்கான கால அவகாசம் 120 நிமிடங்கள். இந்த தேர்வில் குறைந்து 70 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்கும் முறை



  • முதலில்  |NLC Recruitment 2023 | https://web.nlcindia.in/rec032023/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • home page- ல் NLC Recruitment 2023 என்றதை கிளிக் செய்ய வேண்டும்

  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.

  •  அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


விண்ணப்பக் கட்டணம்


மேற்கண்ட  பணிக்கு UR/EWS/OBC  பிரிவினருக்கு  விண்ணப்பக் கட்டனமானது ரூ.486 இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், SC/ST/EX serviceman விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த  பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.06.2023


இந்த பணி அறிவிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.nlcindia.in/new_website/careers/Engagement%20of%20Nurses%20&%20Paramedics%20notification%20may%202023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.




மேலும் வாசிக்க..


https://tamil.abplive.com/technology/whatsapp-featuretesting-status-archive-feature-for-business-accounts-120497/amp


https://tamil.abplive.com/entertainment/maamannan-movie-poster-with-udhayanidhi-stalin-and-keerthy-suresh-is-out-mari-selvaraj-fahadh-faasil-a-r-rahman-details-120482/amp