வேலை தேடுவோர்களின் கவனத்திற்கு.. ஜூன் மாதம் இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டிய அரசு, தனியார் பணி குறித்த முழு விவரங்களை இக்கட்டுரையில் காணலாம். விண்ணப்பிக்க மறந்துடாதீங்க..

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை:

இந்திய ரிசர்வ் வங்கியில் (RESERVE BANK OF INDIA) காலியாக உள்ள 291 கிரேட்-பி (Grade- B) அலுவலர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட தகவல்கள் குறித்த விவரத்தை இங்கே காணலாம்.

பணி விவரம்:

Officers in Grade ‘B’(DR)- General

Officers in Grade ‘B’(DR)- DEPR Officers in Grade ‘B’(DR)- DSIM

விண்ணப்பம் செய்வது எப்படி? 

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் https://www.rbi.org.in/- மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/rbioapr23/-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09-06-2023 (23:00)

இது தொடர்பான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/DADVTGRB09052023FA65E4FB1C2CF473396B4FD7E5F69CDDE.PDF - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.’

பாரத ஸ்டேட் வங்கி பணி:

நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI- State Bank of India) காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Assistant General Manager' மற்றும் ‘”Chief Manager’ ஆகிய பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
 
பணி விவரம்:
  • உதவிப் பொது மேலாளர்
  • தலைமை மேலாளர்
  • புராஜெக்ட் மேலாளர்
  • மேலாளர்
டெக் ஆர்கிடெக், இன்ஃப்ரா க்ளவுட் ஸ்பெசலிஸ்ட், எஸ்.ஐ.டில் டெஸ்ட் லீட், பர்ஃபாமன்ஸ் டெஸ்ட் லீட், ஆட்டோமேசன் டெஸ்ட் லீட், டெடிங் அண்லிஸ்ட் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 
 
விண்ணப்பிப்பது எப்படி?
 
https://bank.sbi/careers - அல்லது https://www.sbi.co.in/web/careers - என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.06.2023
 
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://sbi.co.in/documents/77530/36548767/150523-ADV_CRPD_SCO_2023_24_07.pdf/5a021a12-c18e-ef29-1ce2-08bfe7b90c74?t=1684154986823- என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
 
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பானது தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology). இந்த நிறுவனம் கடல் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் கடல் வளங்களை உபகோகப்படுத்திக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.  தற்போது நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் நேரடி ஆட்சேர்ப்புக்கான வேலைவாய்ப்பு தகவல் இடம்பெற்றுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை இதில் தெரிந்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் விவரம் 

  • விஞ்ஞானி - எஃப்
  • விஞ்ஞானி - இ 
  • விஞ்ஞானி - டி
  • விஞ்ஞானி - சி

மேலும் படிக்க.. https://www.niot.res.in/documents/admin_advertisement/2023_regular/2023_regular_advertisement.pdf

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.10.2023

 எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பு:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் 'Combined Higher Secondary (10+2) Level' தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் குரூப் சி பிரிவு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சுமார் 1,6 00 கிளர்க் மற்றும் டேட்டா எண்ட்ரி காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்  விவரத்தை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். வாய்ப்பை தவறவிட வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு  ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

பணி விவரம்:

 Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

Data Entry Operator, Grade ‘A’

கூடுதல் தகவல்களுக்கு:

ஆங்கில மொழியில் உள்ள அறிவிப்பின் லிங்கை Notice_chsl_09052023.pdf (careerpower.in)- க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி- 08.06.2023 - இரவு 11 மணி வரை