ஹைதராபாத்தில் செயல்பட்டுவரும் தேசிய மருந்து ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவன கல்லூரியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமுள்ள பட்டதாரிகள் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இந்திய பொது மருந்து ஆராய்ச்சி பல்கலைக்கழங்களில் ஒன்றாக தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத் (The National Institute of Pharmaceutical Education and Research) விளங்கிவருகிறது. இது இந்தியாவின் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. இங்கு மருந்து அறிவியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை வழங்குகிறது. இதோடு  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக, இந்திய மருந்துவத் துறையின் மனித வள மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகித்துவரும் நிலையில், தற்போது பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  எனவே இதற்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதி? என இங்கே தெரிந்துக்கொள்வோம்.





ஹைதராபாத் NIPER கல்லூரி பணியிடங்களுக்கானத் தகுதிகள்:


பணியிட விவரங்கள்:


Scientist/Technical supervisor Grade-I & II – 5


வயது வரம்பு- கிரேடு 1 பணிக்கு 40 வயதிற்குள்ளேயும், கிரேடு II பணிக்கு 35க்குள் இருக்க வேண்டும்.


Technical Assistant ( Computer Section) – 1


Accountant – 2


Receptionist Cum Telephone operator – 1


Store keeper – 1


Assistant Grade I- 1


Assistant Grade  II – 3


வயது வரம்பு:


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Junior Technical Assistant – 4


வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:


மேற்கண்ட பணியிடங்கள் அனைத்திற்கும் விண்ண்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எம்.எஸ்.சி, எம்.பார்ம், எம்.வி, எஸ் சி போன்ற ஏதாவதொரு படிப்புடன் 4 ஆண்டுகள் ஆராய்ச்சி அல்லது  ஆசிரியர்  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


கணினி அறிவியல் பிரிவில் பட்டம் பெற்று, 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


இதோடு பி.காம் பட்டத்துடன் 3 ஆண்டு அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.


பி.காம், பி.எஸ்.சி முடித்து 3 ஆண்டு அனுபவம் பெற்றிருப்பவர்கள், அறிவியல் பிரிவில் ப்ளஸட 2 தேர்ச்சி  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், www.niperhyd.edu என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி – மார்ச் 2, 2022


விண்ணப்பக்கட்டணம்: ஆன்லைன் வாயிலாக ரூ.500 செலுத்த வேண்டும்.


தேர்வு செய்யும் முறை:


விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.