விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ், வீரர் வீராங்கனைகள் சேருவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தென் கிழக்கு மத்திய ரயில்வே (பிலாஸ்பூர்) அறிவித்துள்ளது.
மத்திய ஏழாவது ஊதியக்குழுவின் (சிபிசி) படிகளின் படி ஊதியம் வழங்கப்படும்.
காலி பணியிடங்கள்: 21
விண்ணப்பக் கட்டணம்: ஆட்சேர்ப்புத் தேர்வுக்கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அரசு உத்தரவுகளின்படி இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறத் தகுதி உடைய எஸ் சி / எஸ் டி / முன்னாள் படைவீரர் / மாற்றுத்திறனாளிகள் (ஓஎச்/எச் எச்/விஎச்/மற்றவர்கள்), பெண்கள், மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட பிரிவினர் ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான வயதுவரம்பில் தளர்வுகள் பின்பற்றப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: நிலை 2 பிரிவுக்கான கல்வித் தகுதி விதிமுறை 10 ஆம் வகுப்பு ஐ.டி.ஐ அல்லது இணையான தேர்வு என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது (Grade Pay ₹ 1900 / 2000) என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலை 4 பணிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோன்று,5ம் நிலை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் சம்பந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாடுடன் இருப்பது அவசியமான ஒன்று. இதன் அடிப்படையில் தான் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியத் தேதிகள்:
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் 18.02.2022 முதல், 05.03.2022 (நள்ளிரவு மணி 11.59 வரை) விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு:
கல்வித்தகுதி, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப முறை தொடர்பான விரிவான விளம்பரம், இந்திய ரெயில்வே நிறுவனத்தின் https://nitplrrc.com/RRC_BILASPUR_SPORTS2022/ , secr.indianrailways.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்