வருமானவரித்துறையில் 34  தனிச்செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற ஏப்ரல் 7  ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


இந்தியாவில் பல்வேறு நிர்வாகவாக மற்றும் வரி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் தீர்ப்பாயங்கள் உள்ளன. குறிப்பாக மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT), வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT), சுங்க வரி, மசோதா மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (CESTAT), தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT), போட்டி மேல் முறையீடு தீர்ப்பாயம்(COMPAT) மற்றும் பாதுகாப்பு மேல் முறையீட்டு தீர்ப்பாயம் (SAT) போன்ற பல பல்வேறு தீர்ப்பாயங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குரூப் பி பதவிக்கான தனிச் செயலாளர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கான விண்ணப்பிப்பதற்கான வேறு தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தனி செயலாளர் பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் – 34


கல்வித்தகுதி:


விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120  வார்த்தைகள் எழுதுபவராக இருக்க வெண்டும்.


கணினிகளில் வேலை செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.( எக்செல் அல்லது பேஜ் மேக்கர்ஸ் போன்ற மென்பொருளில் வேலை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்)


வயது வரம்பு: 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


வருமான வரித்துறையில் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.


இதற்கு முதலில், https://itat.gov.in/files/uploads/categoryImage/1641567383-vacancy-circular-070122.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எவ்வித தவறில்லாமல் பூர்த்தி செய்து வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


Income Tax Appellate Tribunal, Pratishtha Bhawan,


3rd & 4th Floor,


101, Maharshi Karve Marg,


Mumbai – 400020.


தேர்வு செய்யும் முறை:


விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு எழுத்துத்தேர்வு மற்றும் திறனறிவு தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம்:


தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.47, 600 முதல் 1,51, 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, http://itat.gov.in./ மற்றும்  https://itat.gov.in/files/uploads/categoryImage/1641567383-vacancy-circular-070122.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக  முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.