மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனத்தில் (NCERT- National Council of Educational Research and Training) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேராசிரியர் பணி தேடுவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 292
பணி விவரம்:
பேராசிரியர் - 40
இணை பேராசிரியர் - 97
உதவிப் பேராசிரியர் - 155
பேராசிரியர் பணிக்கான கல்வித் தகுதிகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பயின்றிருக்க வேண்டும். ஆராய்ச்சி பிரிவுகளில் குறைந்தது 10 ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு செய்திருக்க வேண்டும். தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் குறைந்தது 10 ஆண்டுகள் இணைப் பேராசிரியராக பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
இணை பேராசிரியர் பணிக்கான கல்வித் தகுதிகள்:
முதுநிலை பட்ட மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கு தொடர்புடைய துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்;
ஆராய்ச்சி பிரிவுகளில் குறைந்தது 7 ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு செய்திருக்க வேண்டும்
தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் குறைந்தது 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
உதவிப் பேராசிரியர் பணிக்கான கல்வித் தகுதிகள்:
முதுநிலை பட்ட மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்;
யுஜிசி (அல்லது) சி.எஸ்.ஐ.ஆர. அல்லது மாநில அரசுகளால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதாவது நெட் (NET)அல்லது ஸ்செட் (SET) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள். 28.10.2022
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான, விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியலின/ பழங்குடியினர் பிரிவுகள், மகளிர் ஆகியோருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
www.ncert.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். ஒரு பதவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியே விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பின் முழு விவரம் அறிய https://ncert.nic.in/pdf/announcement/vacancies/academicvacancy/academicrecruitmentEng.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.