தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (National Research Centre for Banana Trichy) உள்ள வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


Young Professional 


திட்ட உதவியாளர்


கல்வித் தகுதி 


இதற்கு விண்ணப்பிக்க கணினி அறிவியல், வணிகவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


இரண்டு ப்ராஜெட்களுக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


இந்தப் பணிக்கு தேவையான பணிக்கு துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு. 


திட்ட விவரம்: 


“Biochemical dissection of fruit ripening-related phenomena and components and exploring nutraceautical applications of
bioactives of banana” - என்ற திட்டத்தில் உதவியாளராக செயல்பட தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். கிடைக்கப்படும் விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும்.


எப்படி விண்ணப்பிப்பது?


இதற்கு ‘ MS-WORD – TIMES NEW ROMAN FONT – 12 SIZE’ என்ற அளவில் சுயவிவர குறிப்பு, தேவையான சான்றிதழ் நகல், பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். 


மின்னஞ்சல் முகவரி - nrcbrecruitment@gmail.com 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.05.2025


https://nrcb.icar.gov.in/job-opportunities.php -என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரத்தை காணலாம்.


மத்திய அரசு வேலை 


நாட்டின் பொதுத் துறை நிறுவனமான NBCC இந்தியா லிமிடெடில் உள்ள வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க மே மாதம் வரை காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


பணி விவரம் 



  • பொது மேலாளர் (Structual Desigh Civil)

  • பொது மேலாளர் எலக்ட்ரிக்கல் 

  • பொதுமேலாளர் - Architecture ப்ளானிங்

  • கூடுதல் பொது மேலாளர்

  • துணை பொது மேலாளர் 

  • மேலாளர்

  • திட்ட மேலாளர் 

  • துணை மேலாளர்

  • துணை திட்ட மேலாளர் 

  • நிர்வாக பயிற்சி 

  • ஜூனியர் பொறியாளர் 


கல்வித் தகுதி:


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க சிவில், எலக்ட்ரிக்கல், Architecture, மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


துணை மேலாளர் சி.ஏ. ICWA ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


இந்தப் பணிக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு கால பயிற்சி அளிக்கப்படும். ப்ரோபேஷன் காலத்திற்கு பிறகே பணி நிரந்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஊதிய விவரம்



  • பொது மேலாளர் - ரூ.90,000 - ரூ.2,40,000/-

  • கூடுதல் பொது மேலாளர் - ரூ.80,000/- - ரூ.2,20,000/-

  • துணை பொது மேலாளர் - ரூ.70,000 - ரூ.2,00,000/-

  • மேலாளர் - ரூ.60,000 - ரூ.1,80,000/- 

  • திட்ட மேலாளர் - ரூ. 60,000- ரூ.1,80,000/-

  • துணை மேலாளர்  (HRM ) - ரூ.50,000 - ரூ.1,60,000/-

  • சீனியர் திட்ட செயலாளர் - ரூ.40,000 - ரூ.1,40,000/-

  • ஜூனியர் பொறியாளர் - ரூ.27,270/-


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 49 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை


இதற்கு விண்ணபிக்க https://nbccindia.in/index- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


தெரிவு செய்யப்படும் முறை


இதற்கு நேர்முகத் தேர்வு , கணினி முறை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 


விண்ணப்ப கட்டணம்


இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1000/- செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி - 07.05.2024


இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய https://nbccindia.in/pdfData/jobs/FinalDetailed_Advt_02_2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.