திருவாரூரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள மைக்ரோபயாலஜி துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ இடம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Junior Research Fellow)
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க மைக்ரோபயாலஜி / பயோகெமிஸ்ட்ரி/ லைஃப் சயின்சஸ் ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
யீஸ்ட் ஜெனிடிக்ஸ், யீஸ்ட் செல் பயோலஜி மற்றும் மாலிகுலர் பயோலஜி ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
NET/GATE ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் ரெகுலர் முனைவர் பட்ட படிப்பிறகு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
ஊக்கத்தொகை விவரம்:
இதற்கு முதல் இரண்டு ஆண்டுகாலத்திற்கு ரூ.31,000 +HRAவும் மூன்றாம் ஆண்டில் ரூ.35,000 + HRAவும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் சுயவிவர குறிப்பை kavyabakka@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
“Application for JRF under SERB-CRG” என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.04.2024
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cutn.ac.in/wp-content/uploads/2024/04/Notification-Walk-In-Interview-for-website_15042024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
Job Alert: பி.எட். தேர்ச்சி பெற்றவரா?ரூ.1.25 லட்சம் ஊதியம்; இலங்கையில் வேலை - முழு விவரம்!
Walk in Interview: டிகிரி படித்தவரா?கோவையில் வரும் 24ம் தேதி நேர்முகத் தேர்வு - முழு விவரம்!