தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (National Research Centre for Banana Trichy) உள்ள வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Young Professional
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க Agriculture /Agriculture / Engineering மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். கிடைக்கப்படும் விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு ‘ MS-WORD – TIMES NEW ROMAN FONT – 12 SIZE’ என்ற அளவில் சுயவிவர குறிப்பு, தேவையான சான்றிதழ் நகல், பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி - nrcbrecruitment@gmail.com
தொடர்பு எண் - 0431- 2618125
விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.12.2023
எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பு
SSC என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ] Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles ஆகிய பணியிடங்களுக்கான 26,146 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பணி விவரம்
- கான்ஸ்டபிள் ( Constable (General Duty)) -
- எல்லை பாதுகாப்புப் படை ( Border Security Force (BSF)) -6174
- மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (Central Industrial Security Force (CISF)) - 11025
- மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force (CRPF)) -3337
- இந்தோ - தீபத் காவல் படை (Indo Tibetan Border Police (ITBP))-3189
- சாஸ்த்ரா சீமா பால் (Sashastra Seema Bal (SSB)) -635
- Secretariat Security Force (SSF) -296
- Rifleman (General Duty)
- Assam Rifles (AR) - 1490
மொத்த பணியிடங்கள் - 26146
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
01.01.2024-ன் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும் 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணபிப்பது?
https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணமா ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியில் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். BHIM UPI, Net Banking, by using Visa, Mastercard, Maestro, RuPay Credit or Debit cards. ஆகியவற்றின் மூலம் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய 04.01.2024 முதல் 06.01.2024 (23:00) வரை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள்:
பெங்களூரு, மைசூர்., திருவனந்தபுரம், கோழிக்கோடு, டெல்லி, திருப்பதி, நெல்லூர், புதுச்சேரி, சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, வாராங்கல், மதுரை, திருச்சி, விசாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்களாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2023