இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (National Highways Authority of India (NHAI)) காலியாக உள்ள 18 மேலாளர் (நிர்வாகம்), உதவி மேலாளர் (சட்டம்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National highways Authority of India) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை கீழே காணலாம்.


பணி விவரம்:


மேலாளர் (நிர்வாகம்) - 12


மேலாளர் (சட்டம்) - 2


உதவி மேலாளர் (சட்டம்) - 4


கல்வித் தகுதி:


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி காலம்:


இந்த வேலைவாய்ப்பு ’ deputation' பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலானது. இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மூன்றாண்டுகள் வரை பணிக்காலம், திறன் அடிப்படையிலும், நிரந்தர பணிக்கான தேவையின் அடிப்படையிலும் ஒப்பந்தகாலம் நீடிக்கப்படும்.


ஊதிய விவரம்:


மேலாளர்(நிர்வாகம்) பணிக்கு மாத ஊதியமாக ரூ. 15,600 முதல் ரூ.39,100 வரை வழங்கப்படும்.  


மேலாளர் (சட்டம்) பணிக்கு  ரூ. 15,600 முதல் ரூ.39,100 வரை வழங்கப்படும்.  


உதவி மேலாளர் பணிக்கு ரூ.9,300 முதல் ரூ. 34,800 வரை மாதம் ஊதியமாக வழங்கப்படும்


வயது வரம்பு:


 இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


 தேர்வு செய்யப்படும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ’Deputation' முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


https://www.nhai.gov.in -என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.01.2023 மாலை 6 மணி வரை


அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விவரத்தை தெரிந்து கொள்ள https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Advertisement_0.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.




மேலும் வாசிக்க..


AAI Recruitment: பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்..? இந்திய விமான நிலையங்களில் 596 பணியிடங்கள்..! இப்பவே அப்ளை பண்ணுங்க...


ICDS Job: தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை சேவைகளில் வேலை வேண்டுமா...? உடனே அப்ளை பண்ணுங்க...