மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள 21 கிளார்க், ஓட்டுநர், சிடிஐ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


 தேசிய பாதுகாப்பு மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகள் தொடர்பான அனைத்து நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகளையும் ஒன்றிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்டு இயங்கிவருகிறது மத்திய பாதுகாப்பு அமைச்சகம். மேலும் இந்திய ராணுவம், இந்திய வான்படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகிய முப்படைகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இத்துறையின் கீழ் பலர் பணியாற்றிவரக்கூடிய நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வரும். இந்நிலையில் தற்போது கிளார்க், ஓட்டுநர், சிடிஐ போன்ற 21 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான கல்வித்தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை போன்ற இதர விபரங்களை இங்கே அறிந்துக்கொள்வோம்.





மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிவதற்கானத் தகுதிகள்:


Lower Division clerk (LDC) -10, Civilian Technical – 2, Steno Grade II – 1 பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது  முதல் 25  வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் காலியாக உள்ள 8 Civilan Motor Driver பதவிக்காக விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி :


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பணிகளுக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை:


முதலில், https://indianarmy.nic.in/home என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். அதில் கேட்கப்பட்டுள் அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலமாக  அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி :


The presiding officer,


Civilian Direct Recruitment ( Sacrutiny of Application ) Board,


Headquarters 1 signal Training centre,


Jabalpur (MP) – 482001





சம்பளம் – தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 19 ஆயிரம் 900 முதல் 81 ஆயிரத்து 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.  மத்திய அரசில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள் உடனடியாக மேற்கண்டப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்…