சென்னை நகர்ப்புற சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  மன நல மருத்துவர், உளவியல் ஆலோசகர், சமூக சேவகர், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பினை சென்னை மாநகராட்சி  வெளியிட்டுள்ளது.

  

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில், " செவிலியர் (25), ஆய்வக நுட்பனர்கள், அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர்கள், தொற்றுநோயியல் நிபுணர், கண் சிகிச்சை உதவியாளர், கணக்கு அதிகாரி, கணக்கு உதவியாளர், DEO Cum Accountant, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் , மன நல மருத்துவர் , சமூக பணியாளர் ,மருந்தாளுநர்,  மருத்துவ பணியாளர், பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையல் ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது.  

பணியின் ஒப்பந்தம் காலம் 11 மாதம். அதன்பின், விண்ணப்பதாரரின் செயல்திறன் அடிப்படையில் ஒப்பந்த காலம் அதன்பின் புதுப்பிக்கப்படலாம்.                       

 

 

 பணி  சம்பளம் காலி பணியிடங்கள்  கல்வித் தகுதி 
மன நல மருத்துவர் 18,000 1 சம்பந்தப்பட்டத் துறைகளில் முதுகலைப் பட்டம் 
சமூக பணியாளர்  18,000 5 சம்பந்தப்பட்டத் துறைகளில் முதுகலைப் பட்டம் 
மருந்தாளுநர் 10,000 1 டிப்ளோமா 
மருத்துவ பணியாளர் 5,000 2 எட்டாவது வகுப்புத் தேர்ச்சி 

பாதுகாப்பு அதிகாரி
6,300 2 எட்டாவது வகுப்புத் தேர்ச்சி 

பணிக்கான விரிவான விண்ணப்ப படிவம் பெருநகர சென்னை மாநகாராட்சி வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.  இந்த விரிவான விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து, உரிய சான்றிதழ்களுடன் (அசல் கல்வி சான்றிதழ் மற்றும் பணி சான்றிதழ்) உரிய வகையில் ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவுரைகளும் வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.10.2021 மாலை 5 மணிக்குள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. 

முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், நேர்காணல் தேர்வுக்கு வரவழைக்கப்படுவர்.   

ஆன்லைன் மின்னஞ்சல் முகவரி: gcchealthhr@chennaicorporation.gov.in   

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி  Office of the member Secretary,CCUHM, City Helath Officer,Public Health Department, Greater Chennai Corporation, Rippon Building, Chennai - 3.