மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாகப்படினம், கடலூர், வேலூர்,திருச்சிராப்பள்ளி,திருப்பூர்,நாமக்கல், திருவண்ணாமலை, செங்கப்பட்டு, தஞ்சாவூர்,சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, கரூர், ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை / 17.02.2024) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்களின் விவரம் பின் வருமாறு..


கோயம்புத்தூர்


கோவை பாலக்காடு மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்  காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 வரை முகாம் நடைபெறும்.


திருவாரூர்


திருவாரூர் மயிலாடுதுறை சாலை புது தெருவில் அமைந்துள்ள நியூபாரத் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளியில் - காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 


இராமநாதபுரம் 


முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை - காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 வரை முகாம் நடைபெறுகிறது.


கரூர்


வெண்ணைமலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை 


தென்காசி


ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தென்காசி -காலை 9 மணி முதல் 2 மணி வரை  


தூத்துக்குடி


மகாலட்சுமி மகளிர் கலைக்கல்லூரி,எட்டையபுரம் மெயின்ரோடு,புதிய பேருந்து நிலையம் அருகில். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 


திருநெல்வேலி


செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, பாளைய்அங்கோட்டை - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 


சிவகங்கை


திருப்பத்தூர் ஆர். சி. பாத்திமா நடுநிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை


தஞ்சாவூர்


பாரத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில்  நடக்கிறது. காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை..


செங்கல்பட்டு


வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி, பல்லாவரம் - காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை..


திருவண்ணாமலை


கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை..


நாகப்பட்டினம்


நகராட்சி நடுநிலைப்பள்ளி காடம்பாடி நாகப்பட்டினம் - காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை 


கடலூர்


Government Girls' Higher Secondary School, Railway Feeder Road, Chidambaram - காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை..


வேலூர் 


TTD வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, ,KOSAPET, VELLORE


காலை 8 மணி முதல் 3 மணி வரை..


திருச்சி


தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி


காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.


திருப்பூர்


திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி..


காலை 8 மணி முதல் 3 மணி வரை..


திண்டுக்கல்


ஜி.டி.என். கலை கல்லூரி, கரூர் சாலை, திண்டுக்கல்..


நாமக்கல்


EXCEL GROUP OF INSTITUTIONS ,KUMARAPALAYAM -NH-544, Salem Main Road, Sangagiri West, Pallakkapalayam, ,Komarapalayam Namakkal 


காலை 8.30 மணி முதல் 3 மணி வரை.


முன்னணி நிறுவனங்கள் 


இவ்வேலைவாய்ப்பு முகாமில்  பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.


யாரெல்லாம் பங்கேற்கலாம்?


இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள். பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.


இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in- என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.


வேலைதேடும் இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca_login-வாயிலாக பதிவு செய்யலாம். ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.