தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை சார்பில் கோயம்புத்தூர், அரியலூர், மயிலாடுதுறை வரும் 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை / 23.08.2024) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூரில் உள்ள  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம்  01.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

District Employment and Career Guidance CentreCHERAN NAGAR,COIMBATORE,Coimbatore,Landmark: NEAR GOVT ITI

அரியலூர்

அரியலூரில் உள்ள  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம்  02.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

District Employment and Career Guidance CentreAriyalur,Landmark: Opposite to Collector Office

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் உள்ள  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம்  02.00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

முகவரி:

DISTRICT EMPLOYMENT OFFICE,COLLECTORATE CAMPUS BACKSIDE,VENGIKKAL,TIRUVANNAMALAI-606604,Thiruvannamalai,Landmark: GOVT ITI BACKSIDE

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் பிற்பகல்  03.00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

முகவரி:

யூனியன் கிளப், கச்சேரி சாலை, மயிலாடுதுறை,Landmark: மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில்

முகவரி விவரம் இணைப்பு:

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/322408090016 - என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த முகவரியின் QR -கோட் பெறலாம்.

முன்னணி நிறுவனங்கள்:

இவ்வேலைவாய்ப்பு முகாமில்  பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/Home/index - என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைதேடும் இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca_login -வாயிலாக பதிவு செய்யலாம்.

ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 04362 - 237037