மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) வெளியிட்ட 2006 Stenographer Grade ‘C’ & ‘D’ பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (17.08.2024) கடைசித் தேதி ஆகும். 


பணி விவரம்:


ஸ்டேனோகிராபர் சி, டி பணி (Stenographer Grade ‘C’ & ‘D’)


கல்வித் தகுதி:


இதற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல ஸ்டேனோகிராபி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்:


கிரேடு ’சி’ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.08.2024 அன்று 18  வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கிரேடு ’டி’ பணியிடங்களுக்கு, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் முதல் 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம் :


கிரேடு ’சி’ ரூ.9,300 – 34,800/-


கிரேடு ’டி’ ரூ. 5,200 – 20,200/-


மொத்த பணியிடங்கள் - 2006


தேர்வு செய்யப்படும் முறை :


இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


கணினி வழி தேர்வு பாடத்திட்டம்:



ஸ்கில் டெஸ்ட்:




 


 


விண்ணப்பிக்கும் முறை :


இதற்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ -என்ற இணைப்பை க்ளிக் செய்து  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:


இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு  ரூ.100,  கட்டணமாக செலுத்த வேண்டும். பழங்குடியின / பட்டியலின  பிரிவினர் மற்றும் பெண்கள்,முன்னாள் இராணுவ பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.08.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_steno_2024_07_26.pdf -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


முக்கிய தேதிகள்:


விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி - 18.08.2024 23:00 மணி வரை


விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி தேதி - 27.08.2024 - 28.08.2024 (23:00 மணி வரை)


கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் - அக்டோபர் - நவம்பர், 2024