தமிழக அரசு 108 அவரச ஆம்புலனஸ் சேவையில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் வருகின்ற டிச.24ல் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் அவசர கால அழைப்புக்கானக் கட்டணம் இல்லாத இலவசத் தொலைபேசி எண்ணாக 108  செயல்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் மருத்துவம்,காவல் துறை மற்றும் தீ விபத்து உதவிகளுக்கு 108 எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெற்று வருகின்றனர். அதிலும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தற்போது அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் மிகவும் இன்றியமையாத சேவைகளில் ஒன்றாக விளங்கிவருகிறது. மேலும் தமிழக அரசின் உத்தரவின்படி, 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகப்படுத்தியுள்ள நிலையில், இங்கு வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது அவசர கால 108 சேவையில் மருத்துவ உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.



அவசர கால 108 சேவையில் மருத்துவ உதவியாளர் பணிக்கான தகுதிகள்:


கல்வித்தகுதி:


அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.Sc Nursing, DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதோடு விலங்கியல்,  தாவரவியல், உயிரி வேதியியல், உயிர் தொழில்நுட்பவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு ANM, D.Pharm, DMLT முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


இதர தகுதி : இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் வைத்துள்ள 24-35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியில் சேர்வதற்குத் தகுதியுடையவர்கள். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது மூன்று ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் பெற்று ஒராண்டு நிறைவு செய்திருப்பது அவசியமான ஒன்று.


வயது வரம்பு :


விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதோடு 35 வயதிற்கு மேற்பட்டவர்களின் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவப் பணியாளராக விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல வளாகத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் தங்களது ஒரிஜினல் சான்றிதழுடன் பங்கேற்கலாம்


தேர்வு செய்யும் முறை:


நேர்காணலில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


சம்பளம் – விண்ணப்பதார்களின் தகுதிக்கு ஏற்றவாறு சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் விபரங்களை https://drive.google.com/file/d/1L63gZ25TOlk4g-czaM5XIqz6kx2a_VX0/view என்ற இணையப்பக்கத்திலும்,  91541 89354 மற்றும் 91541 89425 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு  முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.