மதுரை தியாகராசர் கல்லூரியில் ஆசிரியர் இல்லாத பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் நாளைக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை நகரின் மிகவும் பழமையான கல்லூரிகளில் ஒன்றாகவும், காமராசர் பல்கலைக்கழகத்தில் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்பட்டுவருகிறது தியாகராசர் கல்லூரி. கருமுத்து தியாகராஜன் என்பவரால் கடந்த 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி மதுரை நகரின் கிழக்கில்  வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது  ஆசிரியர் இல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எனவே என்னென்ன பணிகள், தகுதிகள் மற்றும் சம்பள விபரம் குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.


மதுரை தியாகராசர் கல்லுரியில் காலியாக உள்ள பணியிடங்கள்:


இளநிலை உதவியாளர்


 தட்டச்சர்


ஆய்வுக்கூட உதவியாளர்


பதிவறை எழுத்தர்


நூலக உதவியாளர்


அலுவலக உதவியாளர்


பெருக்குபவர்


காவலர்


 குடிநீர் கொணர்பவர்


துப்புரவாளர்


 தோட்டக்காரர்


குறியீட்டாளர்





வயது வரம்பு: மேற்கண்ட அனைத்துப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விதிகளின் படி குறிப்பிட்டப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், முதலில் www.tcarts.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.


மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து  அதனுடன் தேவையான கல்வி, பணி முன் அனுபவம் குறித்த அனைத்துச்  சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


செயலர்,


தியாகராசர் கல்லூரி,


139-140 காமராசர் சாலை, தெப்பக்குளம்


மதுரை -9.


இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நாளைக்குள் அதாவது அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை : தியாகராசர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்காக இந்த அறிவிப்பில் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை www.tcarts.in என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.