மதுரையில் 314 கோடி மதிப்பீடடில் டைடல் பார்க் முதல் கட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 16 மாதத்தில் பணிகள் நிறைவடையும் என தகவல்.
டைடல் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பூங்காக்கள்
தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி சமமான முன்னேற்றம் மற்றும் பரவலாக்க திட்டத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட டைடல் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மாட்டுத்தாவணியில் ரூபாய் 314 கோடி மதிப்பீட்டில் 534 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் பன்னிரண்டு தளங்களுடன் IT, ITES, BPOS, STARTUPS போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்காவாக அமைக்கப்பட உள்ளது.
இதில் சுமார் 12,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு. குளிர்சாதன வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம், மதுரை மாவட்டம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.
கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மதுரையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் டைடல் பூங்கா பணிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணைமேயர் நாகராஜன், டைடல் பூங்கா செயற்பொறியாளர் ஜெயமணி மௌலி, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டைடல் பார்க்கில் பல்வேறு வசதிகள்
ஒரே பிளாக் என்ற அடிப்படையில் 72 மீட்டர் நீளத்திற்கு கட்டுமானம் மேற்கொள்ளவுள்ள வரை தரைத்தளம் மட்டும் 4,008.71 சதுர அடியில் அமைகிறது. மதுரை மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மறுசுழற்சி முறையில் 234 கே.எல்.டி தண்ணீர் உற்பத்தி செய்யப்படும். 164 எம்-3 கொள்ளளவுள்ள மழைநீர் வடிகால் முறை அமைகிறது. அனைத்துவித மான முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிக்கான துவக்கவிழா 18.02.2025 நடைபெற்றுள்ளது. இந்த டைடல் பார்க்கில் பல்வேறு நவீன வசதிகள் செய்து தரப்பட உள்ளது. கட்டுமானம் முடிந்த பிறகு தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இந்த டைடல் பார்க்கும் மூலம் வேலை வாய்ப்பில் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -போக்சோவில் சிக்கிய பூசாரி.. கோயிலை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு ! நடந்தது என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !