மதுரை பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா (PM SHRI KV) பள்ளியில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இந்த ஆசிரியர் நியமனங்கள் முற்றிலும் ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் நடைபெற உள்ளன. இதற்கான நேரடி நேர்காணல் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அன்று பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

பணியின் விவரங்கள்

Continues below advertisement

ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், பொருளியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம்.
  • அத்துடன் பி.எட் முடித்திருப்பது கட்டாயம்.
  • கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு பி.எட் கட்டாயமில்லை; எனினும் B.E/ B.Tech (CS/ IT), MCA அல்லது M.Sc (CS) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாகப் பாடம் நடத்தும் திறனும், கணினியைக் கையாளும் திறனும் பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு மற்றும் ஊதியம்

நேர்காணலில் பங்கேற்போரின் வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்குத் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) விதிமுறைகளின்படி மாத தொகுப்பூதியமாக ரூ. 27,500 வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.

நேர்காணல் நடைபெறும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழுமையான சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பப் படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம்.

நேர்காணல் நாளான ஆகஸ்ட் 7 அன்று காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முன்பதிவு நடைபெறும். அதன் பின்னரே நேர்காணல் தொடங்கும்.

நேர்காணலில் பங்கேற்க பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.  முழுமையான விவரங்களை மதுரை கேந்திரிய வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேந்திரிய வித்யாலயா சங்கதன் கேட்டுக்கொண்டுள்ளது.

தொலைபேசி எண்கள்: 0452 -2531361