மதுரை இந்துசமய அறநிலைய இணை ஆணையர் அலுவலகங்களில் காலியாக அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவில்கள் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது மதுரை இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கானத் தகுதிகள்:
மொத்த பணியிடங்கள் - 3
கல்வித் தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதந்தோறும் ரூ. 15,000 – 50,000 என நிர்ணயம்
ஓட்டுநர் (Staff Driver) பணிக்கானத் தகுதிகள்:
கல்வித் தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதோடு விண்ணப்பதாரர்கள் தஇலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மற்றும் நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதந்தோறும் ரூ. 19,500 – 62,000
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 34 வயதும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 37 வயது வரை இருக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் முதலில், உங்களது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை முதலில் நீங்கள் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் உங்களது விண்ணப்பத்தை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
மதுரை.
ஓட்டுனர் பணியிடங்களுக்கு:
இணை ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
பி1, சாலை எல்லீஸ் நகர்,
மதுரை – 625016
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:
அலுவலக உதவியாளர் – ஏப்ரல் 26, 2022
ஓட்டுநர் – ஏப்ரல் 22, 2022
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட முறைகளில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/114/document_1.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.